அஜித் வசனங்கள் குறித்து மனம் திறந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் !

அஜித் வழக்கறிஞராக நடிக்கும் நேர்கொண்டப்பார்வை படத்தில் அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாலியல் வன்கொடுமைகளுக்குள்ளான பெண்களின் கதையைப் பேசும் இந்தப் படம் இந்தியில் வெளியான போது பாராட்டைப் பெற்றது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் படத்தை தயாரிக்கிறார். இந்தப் படம் போனி கபூரின் தயாரிப்பு நிறுவனத்துக்கு தமிழில் முதல் படமாகும். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம்பற்றி நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், இந்தக் கதைக்கு முக்கிய பலம் அஜித், அவர் கூறும் கருத்துகளை மக்கள் கூர்ந்து கவனிப்பார்கள். அவரது வார்த்தைகள் வேதவாக்காக பார்க்கப்படும். சமூக அக்கறையுள்ள ஒரு கருத்தை ஒரு உச்ச நட்சத்திரம் திரையில் பேசும் போது அது நிச்சயம் ஒரு விவாதத்திற்கு வித்திடலாம் என்று கூறியுள்ளார்.