“அஜித், விக்ரம், த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா இவங்க எல்லார் பத்தியும் ஒரு விஷயம்!” – நடன இயக்குனர் பிருந்தா!

“இதுவரை ஆயிரம் பாடல்களுக்குமேல் டான்ஸ் மாஸ்டராக இருந்திருக்கேன்.நிறைய நடிகர் நடிகையுடன் பணியாற்றிஇருக்கிறேன். அனைவருமே நான் விரும்புபவர்கள் தான். அதில் குறிப்பாக விக்ரம் எனக்கு என்னுடைய ஒன்லி 'ராக்கி பிரதர்' அவர். லைஃப்ல அவ்வளவு சீக்கிரம் யாரையும் பிரதரா ஏத்துக்க முடியாதில்லையா… அப்படி ஒரு இடம் விக்ரமுக்குக் கொடுத்திருக்கேன்.” இப்போவரைக்கும் குஷ்பு என் பெஸ்ட் ஃப்ரெண்ட் அவளுடைய சிம்பிளிசிட்டி எனக்குப் பிடிக்கும். த்ரிஷா, என்னைக்கும் மாறாம ஒரே இயல்போட இருப்பாங்க. வேலைனு வந்துட்டா, சொல்றதைச் செஞ்சுகொடுக்கிற நடிகை. நயன்தாரா, கடின உழைப்பாளி, விஜய் அமைதியான ஆள்னுதான் தெரியும். ஆனால், அவரை மாதிரி ஹியூமர் சென்ஸான ஆளைப் பார்க்கவே முடியாது. அஜித்கிட்ட எப்பவுமே ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் இருக்கும். தப்பு நடந்தா, கோபம் வரும். நேருக்கு நேராப் பேசிடுவேன். ஷூட்டிங்ல டான்ஸர்கிட்ட டெடிகேஷன் இல்லைனா கோபம் வரும். டைமிங் ரொம்ப முக்கியம்னு நினைப்பேன். `டைமிங்'கை நான் என் குரு மணிரத்னம்கிட்ட கத்துக்கிட்டேன் இவ்வாறாக பிருந்தா கூறினார்.