அஜித், விஜய் ரசிகர்கள் மோதல் – டிவிட்டரில் நடிகை கஸ்தூரி வருத்தம் !

சமூக வலைத்தளங்களில் அநாகரீகமாக மோதிவந்த அஜித், விஜய் ரசிகர்கள் தற்போது கத்திக்குத்தி லெவலுக்கு சென்றுவிட்டனர். ஆம், சென்னை புழல் பகுதியை சேர்ந்த உமாசங்கர் என்ற அஜித் ரசிகரை ரோஷன் என்ற விஜய் ரசிகர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே பகுதியை சேர்ந்த இருவரும் நேற்று அஜித், விஜய் குறித்த வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கும் போது வாக்குவாதம் திடீரென முற்றியதால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ரோஷன், உமாசங்கரை கத்தியால் குத்தியுள்ளார்.  இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த உமாசங்கர் தற்போது ஆபத்தான நிலையில் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ரோஷனை கைது செய்த புழல் காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கஸ்தூரி இதற்கு தனது டிவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். நெகடிவ் விஷயங்களுக்கு இவ்வளவு மெனக்கெடும் தல அஜித், தளபதி விஜய் ரசிகர்கள் அந்த நேரத்தையும் முயற்சியையும் நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தினால் ஊர் உங்களையும் வாழ்த்தும், உங்கள் அபிமான நட்சத்திரத்தையும் வாழ்த்தும் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு விஜய் மற்றும் அஜித் இந்த விஷயத்தில் குறுக்கிட்டு ஏதேனும் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.