‘அஜித் 57’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 57வது படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் இன்று அதிகாலை வெளிவந்துள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் எப்படி இருக்கும், டைட்டில் என்னவாக இருக்கும் என்று கோடிக்கணக்கான அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது வெளியாகியுள்ளது.

இப்படத்தில் அஜித் வெற்றுடலுடன் கூடிய​ ஃபர்ஸ்ட்லுக் மரண​ மாஸாக​ அமைந்துள்ளது மற்றும் படதின் டைட்டில் விவேகம் என்று பெயரிடப்பட்டுள்ளது.அஜித்-சிவா இணைந்த முந்தைய இரண்டு படங்களின் டைட்டில் போலவே இந்த படத்தின் டைட்டிலும் V-யில் ஆரம்பித்து M-ல் முடிவது குறிப்பிடத்தக்கது.இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமூக​ வலைதளங்களில் மிகவும் வேகமாக​ பரவி வருகிறது.