Cine Bits
அஜீத்துக்கு பிறந்த நாள் வாழ்த்து – இயக்குநர் சேரனைக் கலாய்த்த விஜய் ரசிகர்கள்!

மே 1 நேற்று தல அஜீத்தின் பிறந்தநாளுக்கு திரையுலகின் அத்தனை புள்ளிகளும் வாழ்த்து மழையில் நனைத்த நிலையில் இயக்குநர் சேரனும் தன் பங்குக்கு எந்தவித பின்னனியும் இல்லாமல் திரைத்துறையில் நுழைந்து இன்று தனக்கென ஒரு நிலையான இடத்தை தன் உழைப்பால் பெற்றிருக்கும் நல்ல மனம் கொண்டவரான திரு.அஜித் அவர்களுக்கு மனப்பூர்வமான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அஜீத்துக்குக் குவிந்த வாழ்த்துகளால் சற்றே கடுப்பில் இருந்த விஜய் ரசிகர்கள் பலரும் சேரனை அஜீத் பட வாய்ப்புக்காக காக்கா பிடிப்பதாக நக்கலடித்திருந்தனர். ஆனால் பதிலுக்கு சேரன் பொறுமையாக, ரொம்ப டென்சனாகாதீங்க தம்பிகளா உங்க தளபதி பிறந்தநாளுக்கும் கூட கண்டிப்பாக வாழ்த்து சொல்வேன் பதிலளித்திருந்தார்.