Cine Bits
அஞ்சலியின் “ரோசாப்பூ” படம்.
அஞ்சலி கடந்த சில வருடங்களுக்கு முன் தமிழில் பிசியாக நடித்து வந்த சமயத்தில் மலையாளத்தில் 'பையன்ஸ்' என்கிற படத்தில் ஜெயசூர்யாவிற்கு ஜோடியாக முதன்முறையாக அறிமுகமானார். இதனை அடுத்து வினு ஜோசப் இயக்கத்தில் 7 வருடங்கள் கழித்து “ரோசாப்பூ” என்ற மலையாள படத்தில் ரேஸ்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் ஹீரோவாக பிஜிமேனன் நடித்துள்ளார்.இதில் செளபின் சாஹிர், இயக்குனர் திலீஷ் போத்தன், நீரஜ் மாதவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படம் பிப்ரவரி 2ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் பாடல்கள் நேற்று வெளியானது.