அஞ்சலி காதலி அல்ல; தோழிதான்!” – நடிகர் ஜெய்!

‘பகவதி’ படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்து திரையுலகுக்கு அறிமுகமானவர், ஜெய்.இவரும், நடிகை அஞ்சலியும், ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும், இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் கூறப்பட்டது. ஆனால், அந்த காதல் சீக்கிரமே முறிந்து போனதாக பேசப்படுகிறது. இதுபற்றி ஜெய்யிடம் கேட்டபோது, “நானும், அஞ்சலியும் நெருங்கி பழகியது உண்மைதான். எங்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. அஞ்சலி என் காதலி அல்ல; தோழிதான். எங்கள் நட்பு தொடரும்” என்று கூறினார்.