அடம்பிடிக்கும் சரவணா ஸ்டார் அண்ணாச்சி – நடித்தால் நயன்தாராவுடன் தான் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை !

10 வருடங்களை கடந்தும் நம்பர் 1 நடிகையாக விளங்குபவர். தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஹீரோயினாக நடித்தாலும் தனி ஹீரோயினாக தமிழில் நடிக்கவே அவர் விரும்புகிறார். முன்னணி ஹீரோக்கள் நயன்தாரா தங்கள் படங்களில் நடிப்பதை கௌரவமாகவே நினைத்து வருகிறார்கள். இந்த நிலையில் படத்தில் நடிக்க ஆசைப்படும் பிரபல துணிக்கடை சரவணா ஸ்டோர்  அதிபர் நயன்தாராவை தனது ஜோடியாக நடிக்க அணுகியுள்ளாராம். சென்னையின் பிரபல துணிக்கடை அதிபரான அவர் தானே விளம்பரங்களில் தோன்றி அதிர்ச்சி தந்தார். பின் தமன்னா, ஹன்ஷிகா போன்ற ஹீரோயின்களை தனக்கு ஜோடியாக விளம்பர படங்களில் நடிக்க வைத்தார். தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோ அவதாரம் எடுக்க உத்தேசித்திருக்கும் அவர் தனக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க முயன்று வருகிறாராம். இதைக்கேட்டு அதிர்ந்த நயன்தாரா அதிர்ந்தியடைந்தாராம். இவருடன் நடித்தால் தனது பெயரும், மார்க்கெட்டும் போய்விடும் என்பதால் நோ சொல்லிவிட்டாராம். ஆனால் ஜோடி சேர்ந்தால் நயன்தாரா என்ற முடிவில் இருக்கும் நகைக்கடை அதிபர் நயன்தாராவுக்கு சம்பளமாக ரூ.10 கோடி தருகிறோம் எனக் கூறி பேசி வருகிறாராம். இன்னும் நயன்தாரா ஒத்துக்கொள்ளவில்லையாம்.