அடர்ந்த காட்டில் மிக தில்லாக நடித்து வரும் சுனைனா !

சுனைனா ‘காதலில் விழுந்தேன்’ படத்தின் வாயிலாக நம் கோலிவுட்டில் அறிமுகமானார். இந்தப் படம் இவருக்கு மிக பெரிய புகழையும், வெற்றியையும் தேடி தந்தது. அதன் பின் இவர் ‘மாசிலாமணி’, ‘யாதுமாகி’, ‘வம்சம்’, ‘நீர்ப்பறவை’ உட்பட பல படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது சுனைனா தனது அடுத்த படத்தில் அடர்ந்த காட்டிற்குள் படப்பிடிப்பு நடக்கிறது. மேலும், உலகிலேயே மிகக் கொடூரமான நாய் வகையான பிட்புலுடன் காட்டுக்குள் மிகவும் தில்லாக வலம்வருகிறார் இதனை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த படத்திற்கு ட்ரிப் என்று பெயரிட்டுள்ளனர்.