அடுத்தடுத்து குவியும் படவாய்ப்புகள் யோகிபாபுக்கு அடித்தது யோகம்

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள நகைச்சுவை நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் யோகி பாபு என்றே சொல்லலாம். பல ஜாம்பவான் காமெடியன்கள் ஒரு புறம் அமைதி காக்கும் வேளையில் தனக்கான சரியான பாதையை அமைத்து அதை தக்கவைத்து கொண்டு வருகிறார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் தற்போதுள்ள நகைச்சுவை நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் யோகி பாபு என்றே சொல்லலாம். சமீபத்தில், யோகி பாபு நாயகனாக நடித்து வெளிவந்த தர்மபிரபு, கூர்கா என இரண்டு படங்களுமே தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் அதிபர்களுக்கும் கொழுத்த லாபம் தந்ததாக கோலிவுட் பட்சிகள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த கோமாளி படமும் இந்த வெற்றிப் பட வரிசையில் இடம் பிடித்துள்ளது. யோகி பாபு தற்போது ரஜினிகாந்துடன் தர்பார் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.