அடுத்தடுத்து திரைக்கு வர காத்திருக்கும் கார்த்தி, ஜோதிகா படங்கள் !

ஜோதிகா ‘ராட்சசி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ராஜ் இயக்குகிறார். சத்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோரும் உள்ளனர். ஜோதிகா பள்ளி தலைமை ஆசிரியை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அரசு பள்ளியின் தரத்தை உயர்த்துவது பற்றியும், மாணவர்களின் கல்வி மேம்பாட்டையும் இந்த படம் பேசுகிறது. இதன் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. இந்த மாதம் இறுதியில் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். கார்த்தி தேவ் படத்துக்கு பிறகு கைதி படத்தில் நடித்து வருகிறார். அதிரடி திகில் படமாக தயாராகிறது. நரேன், தீனா, வட்சன், கன்னா ரவி உள்பட பலர் நடித்துள்ளனர். கதாநாயகி மற்றும் டூயட் பாடல் காட்சிகள் இல்லாத படமாக தயாராகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்கிறார். இவர் மாநகரம் படத்தை இயக்கி பிரபலமானவர். இதில் அவர் தாதாவாக நடிக்கிறார். கைதி படத்தை அடுத்த மாதம் 19-ந் தேதி திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர்.