அடுத்தடுத்து வெளியாகும் ஜி.வி.பிரகாஷின் படங்களின் வரிசை!

ஜி.வி.பிரகாஷ் நடித்த சர்வம் தாளமயம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இசையை மையமாகக் கொண்ட இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் '100 % காதல்', 'வாட்ச் மேன்', 'குப்பத்து ராஜா', 4G, 'ஜெயில்' உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. மேலும், பிரபல நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் குப்பத்து ராஜா திரைப்படம் ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பார்த்திபன், பூனம் பாஜ்வா, முக்கிய வேடத்தில் நடிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் இயக்குநர் விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் 'வாட்ச் மேன்' படம் ஏப்ரல் 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.