அடுத்த படத்தை இயக்கும் வாய்பயும் பா.ரஞ்சித்திற்கே கொடுத்த​ ரஜினி

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி மூன்றாவது படத்திலேயே ரஜினியை இயக்கும் வாய்ப்பு ரஞ்சித்திகே கிடைத்திருந்தது.இந்நிலையில் கபாலி என்ற வெற்றி படத்தை கொடுத்துவிட்டு, மீண்டும் ரஜினியை வைத்தே இயக்கும் வாய்ப்பு ரஞ்சித்திற்கு கிடைத்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது நடந்த​ மாவீரன் கிட்டு என்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட  பா.ரஞ்சித் பேசும்போது, கபாலி படத்திற்கு பிறகு ரஜினி மீண்டும் அழைத்தார், நான் சொன்ன ஒன்-லைன் ஸ்டோரி அவருக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. உடனே படம் பண்ணலாம் என்று சொல்லிவிட்டார்.

என் மீதும், என் கதை மீதும் உள்ள நம்பிக்கையில் மீண்டும் இன்னொரு பட வாய்ப்பை கொடுத்துள்ளார் ரஜினி, நிச்சயம் அவரின் நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன் என்றும் அவர் அந்நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.