அடுத்த மாதம் 10 படங்கள் ரிலீசுக்கு தயார்!

அடுத்த மாதம் 10 புதிய படங்கள் திரைக்கு வருகின்றன. ஏப்ரல் 4-ந் தேதி மட்டும் உறியடி, நட்பே துணை, குப்பத்து ராஜா, ஒரு கதை சொல்லட்டுமா ஆகிய 4 படங்கள் வெளியாகின்றன. குப்பத்து ராஜா படத்தில் ஜீ.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். பார்த்திபனும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். நட்பே துணை படத்தில் இசையமைப்பாளர் ஆதி கதாநாயகனாக நடித்துள்ளார். குஷ்பு தயாரித்துள்ளார். நகைச்சுவை படமாக தயாராகி உள்ளது. ஏப்ரல் 12-ந் தேதி கீ, தேவராட்டம், வாட்ச்மேன் ஆகிய 3 படங்கள் வெளியாகின்றன. கீ படத்தில் ஜீவா-நிக்கி கல்ராணி ஜோடியாக நடித்துள்ளனர், திகில் படமாக உருவாகி உள்ளது. தேவராட்டம் படத்தில் கவுதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன் ஜோடியாக வருகின்றனர். முத்தையா இயக்கி உள்ளார், அதிரடி படமாக உருவாகி உள்ளது. ‘வாட்ச்மேன்’ படம் ஜீ.வி.பிரகாஷ், யோகிபாபு நடிப்பில் திகில் படமாக தயாராகி உள்ளது, விஜய் இயக்கி உள்ளார். ஏப்ரல் 19-ந் தேதி காஞ்சனா-3, அலாவுதீன் அற்புத கேமரா, வெள்ளைப்பூக்கள் ஆகிய 3 படங்கள் வெளியாகின்றன.