Cine Bits
அடையாளமே தெரியாமல் ஒல்லியாக மாறிய கொழுக்கு மொழுக் வித்யுலேகா !
2012ஆம் ஆண்டு ஜீவா நடித்த நீதானே பொன்வசந்தம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் இந்த படத்தில் அவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது பெஸ்ட் சப்போர்ட்டிங் நடிகைக்கு தேர்வு செய்யப்பட்டார். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் பஞ்சுமிட்டாய். இவர் கொஞ்சம் குண்டாக இருப்பதால் படவாய்ப்புகள் சரியாக வராததால் தற்போது அதிரடியாக உடல் எடையைக் குறைத்து வருகிறார். தனது உடல் எடையை குறைத்து ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அப்படத்தில் இருப்பது வித்யுலேகாவா என அனைவரும் ஆச்சர்யப்படுகின்றனர்.