அடையாளம் தெரியாதபடி மாறிபோன ப்ருத்விராஜ்!

மலையாள சினிமா உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ப்ருத்விராஜ். தமிழிலும் மொழி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ரஜினியின் பேட்ட படத்தின் கேரள உரிமையையும் வாங்கியிருந்தார். இந்நிலையில் இவரது நடிப்பில் உருவாகி வரும் ஆடுஜிவித்தம் படத்தில் இருந்து அவரது ஒரு கெட்டப் கசிந்துள்ளது. அந்த போட்டோவில் சுத்தமாக அது ப்ருத்வி தானா என்று அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி போய் உள்ளார்.