அட்ராசிட்டி நாயகன் அருண்விஜய் பிறந்த நாள் பரிசாக வி மேகசின் கவுரவம் !

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி வரும் மாஃபியா படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நவம்பர் 19ம் தேதி அருண் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு பிரபல ஃபேஷன் மாத இதழான We Magazine இந்த நவம்பர் மாத அட்டைப் படத்தில் நடிகர் அருண் விஜய்யின் புகைப்படங்களை பயன்படுத்தியுள்ளது. அதற்காக சமீபத்தில், பிரத்யேக போட்டோஷூட்டும் நடத்தப்பட்டது. பாடி பில்டிங் செய்து உடலை நல்ல கட்டுக்கோப்பாக வைத்துள்ள அருண் விஜய், வி மேகஸின் அட்டைப்படத்தில் அட்ராசிட்டி செய்கிறார். அவர் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் பாக்ஸர் படத்திற்காகவும் அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் விஜயகுமாரின் மகனான அருண் விஜய்யின் குடும்பமே சினிமா குடும்பமாக இருந்தாலும், அருண் விஜய் தனது விடா முயற்சியானால், அவர்கள் அனைவரையும் தாண்டி பெரிய இடத்துக்கு உயர்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.