அட்லீ அடுத்தடுத்து இரண்டு படங்கள் தயாரிக்கறார்

அட்லீ குறைந்த வயதில் திரைப்படம் இயக்கிய தமிழ் இயக்குனர்களில் இவரும் ஒருவர். எந்திரன் படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து விட்டு “ராஜா ராணி ” திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார், அடுத்து விஜய்யை வைத்து தெறி எனும் ஹிட் படத்தை கொடுத்தார். தற்போது மீண்டும் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையே அவர் சொந்தமாக “சங்கிலி புங்கிலி கதவ தொற” என்ற படத்தை தனது ஏ பார் ஆப்பிள் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். எம்.ஆர்.ராதவின் பேரன் ஐக் இயக்குகிறார். தனது தயாரிப்பு நிறுவனம் பற்றி செய்தியாளர்களிடம் அட்லீ பேசியதாவது.
முதல் படத்தில் கமல்ஹாசனின் உதவியாளரான என் நண்பன் ஐக்-கை சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தின் கதையை கேட்டு அறிமுகப்படுத்துகிறேன். ஐக், எம்.ஆர்.ராதவின் பேரன், ரொம்ப திறமைசாலி. எனக்கு பேய்னாலே ரொம்ப பயம், அவர் பேய் கதையை வந்து சொன்ன உடனே தயாரிக்க முடிவெடுத்து விட்டேன்.
தொடர்ந்து என் நண்பன், என்னுடன் 10 ஆண்டுகளாக பயணித்து வரும் சூர்யா பாலகுமாரன் இயக்கும் படத்தை இரண்டாவது தயாரிப்பாகவும், என் டீமில் சிறந்த திரைக்கதையாளனாக இருக்கும் அசோக் இயக்கும் படத்தை மூன்றாவது தயாரிப்பாகவும் தயாரிக்க இருக்கிறேன். இந்த இரண்டு படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் மாதம் நடக்கும். நான் இயக்கும் தளபதி 61 நன்றாக போய்க் கொண்டிருக்கிறது என்றார் அட்லீ.