அட்லீ அந்த அக்ரீமெண்டில் மட்டும் கையெழுத்து போட மாட்டாராம் !

அட்லீ இயக்கத்தில் வந்த ராஜா ராணி, தெறி, மெர்சல் என அனைத்து படங்களும் ஹிட் தான். தற்போது விஜய்யை வைத்து இவர் படமெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அட்லீ எப்போதும் சொன்ன பட்ஜெட்டை விட பல கோடி அதிகமாக தான் படம் எடுப்பாராம். அதனால், படம் தொடங்கும் போது பட்ஜெட் விட அதிகமாக சென்றால் நீங்கள் தான் பொறுப்பு என்று தயாரிப்பாளர் ஒரு அக்ரீமெண்ட் போட்டால், அதில் மட்டும் அட்லீ கையெழுத்து போட மறுப்பதாக சினிமா பிரபலம் ஒருவர்  கூறியுள்ளார்.