அதகளம் பண்ண தயாராக இருக்கும் சரவணா ஸ்டோர் அதிபர் !

தமிழகத்தின் முன்னணி சில்லறை ஆடை விற்பனை நிறுவனமான நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி, தனது கடை விளம்பரங்களில் நடித்து மக்களை அதிர்ச்சியடைய செய்தவர், தமன்னா, ஹன்சிகா என இரண்டு ஹீரோயின்களையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு அவர் போட்ட ஆட்டத்தைப் பார்த்து மொத்த தமிழகமே சிரித்தாலும், அதையெல்லாம் பற்றி கவலைப்பாடாதவர் தொடர்ந்து தனது கடை விளம்பரங்களில்  விதவிதமாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், அண்ணாச்சியின் ஹீரோ அவதாரம் விரைவில் அரங்கேற இருப்பதாக புது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அண்ணாச்சியை விளம்பரப் படங்களில் விதவிதமாக காட்டி வருபவர்கள் இரட்டை இயக்குநர்கள் ஜே.டி – ஜெர்ரி இவர்கள் தான் அண்ணாச்சியை ஹீரோவாக இயக்கப் போகிறார்களாம். இந்த இரட்டை இயக்குனர்கள் தான் அஜித்தின் உல்லாசம் மற்றும் திகில் படம் விசில் படத்தையும் இயக்கியவர்கள்.