அதர்வாவுக்கு ஜோடியாக மிர்னாலினி!

டப்ஸ்மாஷ் புகழ் மிர்னாலினி தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடிகையாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழில் சித்தார்த், பாபி சிம்ஹா நடிப்பில் காத்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா படம் தற்போது தெலுங்கில் வால்மிகி என்று ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்த ரீமேக்கில் சித்தார்த் கதாபாத்திரத்தில் அதர்வாவும், பாபி சிம்ஹா கதாபாத்திரத்தில் வருண் தேஜ் நடிக்க இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. தற்போது லக்‌ஷ்மி மேனன் காதாபாத்திரத்தில் நடிக்க மிர்னாலினி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.