அதர்வாவை வைத்து புதிய திரைப்படத்தை இயக்குவேன்- RJ பாலாஜி!

ரேடியோ தொகுப்பாளர்களில் பிரபலமானவர் RJ பாலாஜி. இந்த பிரபலத்தினால் சில படங்களில் காமெடியனாகவும் முக்கிய வேடத்திலும் நடித்தார். பிறகு முழு ஹீரோவாக LKG என்ற படத்தில் கதை, திரைக்கதை எழுதி நடித்தார். படம் நல்ல வசூலை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தற்போது இயக்குனர் ஆவதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார், RJ பாலாஜி. அதர்வாவுடன் அவர் நடித்துள்ள பூமராங் பட பிரஸ் மீட்டில் இதுகுறித்து பேசியதாவது, 2022ல் அதர்வாவை வைத்து படம் இயக்குவேன். அதற்காக அவரிடம் ஏற்கனவே பேசிவிட்டேன் என்று கூறினார்.