அதிமுக நிர்வாகி சதீஷ்குமார் “சொடக்கு மேல சொடக்கு போட்டு” பாடலுக்கு தடை விதிக்க புகார் அளித்துள்ளார்.

விக்னேஷ் சிவன்  இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள  ” தானா  சேர்ந்த கூட்டம் ”  திரைப்படத்தின்  பாடல்கள் நேற்று வெளியாகியுள்ளது. இந்நிலையில்  அதிமுக  நிர்வாகி சதீஸ்குமார்,  இந்த படத்தில் சூப்பர் ஹிட் பாடலான  “சொடக்கு  மேல சொடக்கு போட்டு” என்ற பாடலுக்கு தடைவிதிக்க   சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்  அளித்துள்ளார். இந்த பாடல் இளைஞர்களிடம்  வன்முறையை தூண்டும்  வகையில் இருப்பதாலும், இதில் “கரைவேட்டி , வெள்ளைச்சட்டை  போட்டவனைப் பார்த்தா  வெரட்டி வெரட்டி வெளுக்கத் தோணுதுன்னு ” என்ற வரிக்கு  ஏற்கனவே ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்து இருந்ததால்  அதிமுக நிர்வாகி புகார் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்  இந்த பாடலின்  இசையமைப்பாளர், தயாரிப்பாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று தனது புகாரில் தெரிவித்துள்ளார்.