அத்திவரதரை நள்ளிரவில் தரிசித்த ரஜினிகாந்த், நயன்தாரா, திரிஷா !

கடந்த ஜூலை மாதம் ஒன்றாம் தேதி தொடங்கியது அத்திவரதர் வைபவம். இதுவரை 1 கோடி பேர் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 48 நாட்கள் நடைபெறும் இந்த அத்திவரதர் வைபவம் 17-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் நாளுக்கு நாள் காஞ்சிபுரத்தை நோக்கி பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர். கடைசி நாளான 17-ம் தேதி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நள்ளிரவில் அத்திவரதரை தரிசனம் செய்தார். ரஜினிகாந்தைத்  தொடர்ந்து லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவும் அவரது காதலரான விக்னேஷ் சிவனுடன் நேற்று நள்ளிரவில் அத்திவரதரை தரிசனம் செய்தார். நயன்தாரா மட்டுமின்றி நடிகை த்ரிஷா, பிகில் படத்தின் கிரியேட்டிவ் தயாரிபாளர் அர்ச்சனா கல்பாத்தியுடன் சென்று அத்திவரதரை தரிசனம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.