அந்தாதுன்’ தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த்தை இயக்குகிறார் கவுதம் வாசுதேவ்மேனன்

தி பியானோ டியூனர்’ என்ற பிரெஞ்சு நாவலை தழுவி, கடந்த ஆண்டு இந்தியில் வெளியான படம் ‘அந்தாதுன்’. இதில், ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். க்ரைம் த்ரில்லர் கதையாக உருவான இந்த படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்தார். வெறும் 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 450 கோடிக்கு மேல் வசூல் வேட்டையை நிகழ்த்தியது. இந்நிலையில், அந்தாதுன் படத்தின் தமிழில் ரீமேக் செய்யவிருப்பதாக இயக்குநரும், நடிகருமான தியாகராஜன் அறிவித்திருந்தார். இதில், ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் அவரது மகனும் நடிகருமான பிரசாந்த் நடிக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.  தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ள அந்தாதுன் படத்தை இயக்குநர் கெளதம் மேனன் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கெளதம் மேனன் இயக்கத்தில் அந்தாதுன் ரீமேக்கில் அவர் நடிக்க இருப்பதால் மீண்டும் கோலிவுட்டில் வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.