அனிருத்துக்கு அடித்தது யோகம்!

ஒரே நேரத்தில் கமலின் இந்தியன் 2, முருகதாஸ் இயக்கும் ரஜினி படத்தில் இசையமைக்க அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் ஆகியோரின் படங்களுக்கு அடுத்தடுத்து இசையமைக்கும் வாய்ப்பு அனிருத்திற்கு கிடைத்துள்ளது. அனிருத்துக்கு முன்பாகவே அறிமுகமான இசையமைப்பாளர்களுக்கு இன்னும் ரஜினி, கமல் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திற்கும் அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் தெரிகிறது.