அனுபமா குமார்: “என் மகன் மகிழ்வன்” படத்தின் அனுபவம்

“என் மகன் மகிழ்வன்” படத்தை லோகேஷ் குமார் இயக்கி உள்ளார். இந்த படத்தில் அனுபமா குமார்,கிஷோர், ஜெயபிரகாஷ் மற்றும் ஸ்ரீரஞ்சனி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஓரின ஈர்ப்பாளராக இருக்கும் தன் மகனின் நிலையை புரிந்த ஒரு தாயின் மன நிலை தான் இந்த படம் அம்மாவாக அனுபமா குமார் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்ததை பற்றி அவர்” பெண்ணாக இருந்தாலும்,பையனாக இருந்தாலும் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பும் பெற்றோர்களின் கனவும் இந்த சமூகத்தில் மிகப்பெரும் போராட்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது. குழந்தைகள் மன நிலை அறிந்து பெற்றோர்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது அவசியம். இந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்தது எனக்கு பெருமையாக இருக்கிறது” என்று கூறியுள்ளார். தற்போது அவர் ராஜா ரங்குஸ்கி, வெண்ணிலா கபடி குழு 2 மற்றும் இன்னோரு படத்திலும் நடித்து வருகிறார்.