அனுஷ்காவின் ஆதரவு ஹீரோக்களுக்கே.

அனுஷ்கா பாகமதி படத்தின் புரமோஷனுக்காக சமீபத்தில் கேரளாவுக்கு சென்றிருந்த போது சம்பள முரண்பாடு குறித்து கேட்கப்பட்டபோது அவர் ஹீரோக்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பது என்பது சரிதான் என்றும், ஒரு படத்தில் கடுமையான உழைப்பை கொட்டி நடிக்கிறவர்கள் அவர்கள் தான்.  ஒரு படம் தோல்வி அடையும் போது அதற்கான கெட்டபெயரை ஏற்றுக்கொள்வதும் அவர்கள் தான் என்றும், இந்த விஷயத்தில் நடிகைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறியுள்ளார். பொதுவாக நாயகிகளின் சம்பளம் ஒரு மடங்கு ஏறினால் கதாநாயக்கரின் சம்பளம் 5 மடங்கு ஏறுவது வழக்கம் தான். இந்த சம்பள வித்தியாசத்தை குறித்து நாயகிகள் அவ்வப்போது முணுமுணுத்து  கொண்டுள்ளனர்.