அனுஷ்காவின் வித்தியாசமான கதாபாத்திரத்தில் வெளிவரவிருக்கும் நிசப்தம் படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் !

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் அனுஷ்கா. கடைசியாக அனுஷ்கா நடிப்பில் பாகமதி படம் வந்தது. அதன்பிறகு பட வாய்ப்புகள் இல்லை. உடல் எடை கூடி குண்டான தோற்றத்தில் இருந்ததால் அனுஷ்காவை ஒதுக்கினர். இதனால் கடும் உடற்பயிற்சிகள் செய்து எடை குறைந்த பின் நிசப்தம் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள். 4 இந்தியர்களுக்கும் அமெரிக்க போலீசுக்கும் நடக்கும் கிரைம் திகில் படமாக தயாராகி உள்ளது. அமெரிக்காவில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் திரைக்கு வருகிறது. இந்நிலையில், நிசப்தம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. வசனமே இல்லாத படம் என்பதால் அனைத்து மொழிகளிலும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இப்படத்தில் அனுஷ்கா ஓவிய கலைஞராக நடித்துள்ளார்.