அனுஷ்காவை பாராட்டிய ரஜினி

அனுஷ்கா தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, ஆகியோர்களிடம் இணைந்து நடித்துள்ளார். ஆனால் ரஜினி,கமலுடன் இணைந்து நடிக்க வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தபோது கே.எஸ் ரவிக்குமார் இயக்கிய லிங்கா படத்தில் ரஜினியுடன் இணைத்து நடித்துள்ளார். தற்போது அவர் நடித்துள்ள பாகமதி படம் திரையில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ரஜினி அதனை பார்த்து ரசித்து விட்டு அவருக்கு போன் செய்து அவரது நடிப்பை பற்றியும், படத்தை பற்றியும் மிகவும் பாராட்டியுள்ளார். இதை பற்றி அவர் கூறுகையில் பாகமதி படத்திற்கு அதிக பாராட்டுக்கள் கிடைத்தது. ஆனால் ரஜினியிடம் இருந்து பாராட்டு வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்றும், இந்த பாராட்டை சிறந்த பாராட்டாக கருதுகிறேன் என தெரிவித்துள்ளார்.