அப்பாவுக்காக வாய்ப்புகளை இழக்கும் ஸ்ருதி ஹாசன் !

ஸ்ருதி நடிக்க வந்ததில் இருந்தே அவரை துரத்திய கேள்வி 'அப்பாவுடன் இணைந்து நடிப்பீர்களா?'. அவரும் அதற்காக தான் ஏங்கிக்கொண்டிருந்தார். அப்படி ஒரு வாய்ப்பு சபாஷ் நாயுடு மூலம் வந்தது. அதுவும் அப்பா இயக்கத்திலேயே… உற்சாகமாக போய்க்கொண்டிருந்தபோதே கமல்ஹாசனுக்கு எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு ஓய்வில் இருக்க வேண்டியதாயிற்று. இதனால் படப்பிடிப்பும் தள்ளிப்போக இப்போது மகள் கால்ஷீட்டுக்காக அப்பா வெய்ட்டிங். இப்போது ஸ்ருதி எஸ்3 ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் சபாஷ் நாயுடுவுக்கு சிக்கல் ஏற்பட்டது. ஸ்ருதியோ சபாஷ் நாயுடுவுக்காக அடுத்த படம் கமிட் செய்துகொள்ளவில்லையாம். தன்னால் அப்பா படம் பாதிக்கப்பட கூடாது என்ற எண்ணத்தில் வருகின்ற வாய்ப்புகளை எல்லாம் தட்டிக்கழிக்கிறாராம். மகளின் இந்த செயலால் அப்பாவுக்கு பெருமிதம்.