அப்பா – தங்கையுடன் மீண்டும் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் – ருசிகர தகவல் !

ஸ்ருதிஹாசனும் தமிழில் எந்த படங்களிலும் நடிக்க கவனம் செலுத்தாமல் இருந்தார். அதைத்தொடர்ந்து தற்போது, விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளதை அவரே வெளிப்படையாக கூறினார். இந்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. இந்நிலையில், மீண்டும் தன்னுடைய அப்பா கமலஹாசன் தயாரிப்பில், அக்ஷராஹாசன் நடிகர் விக்ரமுடன் நடித்து வரும் 'கடாரன் கொண்டான்' படத்தில் ஸ்ருதி இணைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கி வரும் இந்த படத்தில், ஸ்ருதிஹாசன் இசையமைப்பாளர், ஜிம்ரன் இசையில் ஒரு பாடலை பாடியுள்ளார். ஏற்கனவே நடிகை ஸ்ருதிஹாசன், தந்தை மற்றும் தங்கை ஆகிய மூவரின் கூட்டனில் உருவான 'சபாஷ் நாயுடு' படம் தற்போது கிடப்பில் போடப்பட்டுளள்து என்பது குறிப்பிடத்தக்கது.