“அமாவாஸ்” பேய் படத்தில் நர்கிஸ் ஃபக்ரி…

நர்கிஸ் பக்ரி “அமாவாஸ்” என்ற பேய் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பேய் படங்கள் எடுப்பதன் மூலம் புகழ் பெற்ற இயக்குனர் பட்டேல் இயக்க உள்ளார். இந்த படத்தை வைக்கிங்  மீடியா, தோட் வென்டர்சன்ஸ், சிம்ப்லி வெஸ்ட் யூகே என்டர்டைன்மென்ட்  ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் துவங்கி நடத்தி வருகின்றனர். இதற்கு முன் இந்த நடிகை நடித்த 'பன்ஜோ' படம் மிக பெரிய தோல்வி அடைந்ததால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து பேய் படங்களில் நடித்து வருகிறார்.