Cine Bits
அமிதாப் பச்சன்:தொடர் படப்பிடிப்பால் உடல்நலக் குறைவு….
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கத்தில் “தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜோத்புரில் நடந்து வரும் நிலையில் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் அங்கு உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மும்பையில் இருந்து சிறப்பு டாக்டர்கள் வரவழைக்கப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை சற்று தேறி உள்ளது. அவருக்கு தொடர்ந்து படப்பிடிப்பில் இருந்ததால் சரியாக தூங்காமலும் மற்றும் உடல்வலி காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது.