அமீர்கானின் லால் சிங் தோற்றம் வெளியாகியுள்ளது !

ஹிந்தி நடிகர் அமீர்கான் தற்போது நடித்து வரும் லால் சிங் சத்தா . இது பல ஆஸ்கர் விருதுகளை வென்ற பாரஸ்ட் கம்ப் என்ற ஹாலிவுட் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக். அமீர்கான் உடன் கரீனா கபூர் நடிக்கிறார். அமீர்கானுடன் நம்ம விஜய் சேதுபதியும் நடிக்கிறார். அத்வைத் சத்தன் இயக்குகிறார். முதுகு எலும்பு முறிவால் அவதிப்படும் ஒரு இளைஞன், தடகள வீரனாகவும், ராணுவ வீரனாகவும்,எப்படி மாறுகிறான் என்பதுதான் படத்தின் கதை. நமது சினிமாவிற்கு ஏற்ப சில மாற்றங்கள் படம் தயாராகிறது . இதில் லால் சிங்காக அமீர்கான் நடிக்கிறார். அவரது வாழ்க்கையில் வந்து செல்லும் முக்கிய நபராக விஜய் சேதுபதி நடிக்கிறார். அமீர்கானின் அந்த கதாபாத்திரத்தின் தோற்றம் தற்சமயம் வெளியாகியுள்ளது.