Cine Bits
அமெரிக்காவிலும் ஒரு அனுஷ்கா சர்மா.. நிஜமும், நிழலும் பேசிய அந்த அழகு தருணம்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியும், பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் தோற்றத்தை போன்று அச்சுஅசலாக அமெரிக்க பாடகி ஜூலியா மைக்கேல்ஸ் என்பவர் காட்சியளிப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட அமெரிக்க பாடகி ஜூலியா மைக்கேல்ஸ் இருப்பதை அனுஷ்கா சர்மாவின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளனர். இதைக்கண்ட பாடகி ஜூலியா ஆச்சரியமடைந்தார். இந்நிலையில், டுவிட்டரில் அனுஷ்கா சர்மாவின் புகைப்படத்துடன் தனது படத்தையும் ஜூலியா பதிவிட்டு, இருவரும் இரட்டையர் போன்று இருப்பதாக கூறியுள்ளார். இது, தனக்கு மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அனுஷ்கா சர்மா பதில் அளித்துள்ளார்.