Cine Bits
அமெரிக்காவில் திருமண நாள் கொண்டாடிய விஜயகாந்த் பிரேமலதா தம்பதிகள்!!

அமெரிக்காவில் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மனைவி பிரேம லதாவுடன் 29வது திருமண நாளை கேக் வெட்டிக் கொண்டாடினார். மக்களவை தேர்தலை எதிர்கொண்டு இருக்கும் நிலையில் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தேமுதிக யாருடன் கூட்டணி வைக்க இருக்கிறது என்ற எதிர்பார்ப்பும் தங்களது தலைவர் எப்போது திரும்புவார். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் திரும்புவாரா என்று காத்துக் கொண்டுள்ளனர் அவரது கட்சி தொண்டர்கள். தற்பொழுது விஜயகாந்தும் அவரது மனைவியும் தங்களது 29வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர், அந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி தேமுதிக தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.