அமெரிக்க டிவி தொடரில் ஸ்ருதிஹாசன் !

தமிழில் முன்னணி நடிகையான ஸ்ருதிஹாசன். தெலுங்கு இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது லாபம் என்ற படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்து வருகிறார். இந்தி படமொன்றுக்கும் ஒப்பந்தமாகி உள்ளார். இசையிலும் கவனம் செலுத்தி வருகிறார். வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடி வருகிறார். பாடல் ஆல்பம் உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் அமெரிக்க டி.வி.யில் வெளியாகி வரும் டிரெட்ஸ்டோன் என்ற தொடரில் நடிக்க சுருதிஹாசன் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த தொடரில் சுருதிஹாசன் நீரா படெல் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த கதாபாத்திரம் டெல்லியில் ஒரு ஓட்டலில் வேலைபார்த்துக்கொண்டு மறைமுகமாக கொலையாளியாகவும் உலவும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.