அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்கும் கோலிவுட் பிரபலங்கள்?

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதை அடுத்து புதிய அதிபரை தேர்வு செய்ய வரும் நவம்பர் 8ஆம் தேதி அங்கு தேர்தல் நடைபெறவுள்ளது.இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சியின் சார்பில் பிரபல தொழிலதிபர் டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.
 
இந்நிலையில் விரைவில் நடைபெறவுள்ள டொனால்ட் டிரம்பின் தேர்தல் பிரச்சார
கலைநிகழ்ச்சியில் கோலிவுட் நட்சத்திரங்களான​ பிரபுதேவா மற்றும் ஸ்ரேயா உள்பட பலர் கலந்து கொள்ளவிருப்பதாக தெரியவந்துள்ளது.