அமேசான் காடுகளை காப்பாற்ற வேண்டும் – சிம்ரன் கோரிக்கை !

அமேசான் காடுகள் உலகின் மிக பெரிய காடாக விளங்குகிறது. இந்த காட்டு பகுதிக்குள் மட்டும் 9 நாடுகள் அடங்கியிருக்கிறது. இந்த காடுகள் கடந்த சில நாட்களாக தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. நடிகை சிம்ரன் இதுகுறித்து கவலை தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- பூமிப்பந்தின் நுரையீரல் என்றழைக்கப்படும் அமேசான் காடுகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அதை உடனே அணைக்க வேண்டும். பூமிப்பந்தை காப்பாற்ற நம்மால் வேறென்ன செய்ய முடியும். உலகின் ஒட்டுமொத்த தேவையில் 20 சதவீத ஆக்சிஜன் அமேசான் காடுகளின் மூலம்தான் பெறப்படுகிறது. உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும் விதம் இந்த தகவலை எடுத்துச் செல்ல வேண்டும். இன்றைய இளைஞர்களுக்கும் வருங்கால சந்ததியினருக்கும் இது மிக முக்கிய விஷயம். ஆரோக்கியமாகவும், பொறுப்புடனும் வாழ வேண்டியது அவசியம்’ என குறிப்பிட்டுள்ளார்.