அமைதிப்படை பாணியில் கமலின் ‘தலைவன் இருக்கிறான்’ !

கமல் இரண்டு ஆண்டு களுக்கு முன்பு ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற படத்தை அறிவித்திருந்தார். தற்போது அந்த படத்தை மீண்டும் தொடங்க இருக்கிறார். தமிழ் மற்றும் இந்தியில் உருவாகும் இந்த படத்தில் இந்தி நடிகர் சயீப் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அமீர் கானுடன் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. தற்போது இதில் கமல் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்ற தகவல் வந்துள்ளது. படத்தின் கதாநாயகன், வில்லன் என 2 வேடங்களுமே கமல்ஹாசன் தான்.
அமைதிப்படை பாணியில் இந்த வேடங்கள் இருக்கலாம் என்கிறார்கள். ஆனால் தலைவன் இருக்கின்றான் படம் ஒரு சீரியசான அரசியல் கதை என்றும் சொல்கிறார்கள். கமலின் அரசியலுக்கு இந்த படத்தின் கதை பெரிதும் உதவும் என்பதால் தான் இந்த படத்தை தூசி தட்டி எடுத்துள்ளார் என்கிறார்கள்.