அம்மாவின் படத்தை பார்த்து வாயடைத்து போன மகள் ஜான்வி!

ஸ்ரீதேவி தமிழ்நாட்டில் பிறந்து இந்தியத் திரைப்படத் துறையில் புகழ்பெற்ற ஒரு நடிகை ஆவர். தற்போது இவர் பொலிவுட்டில் நடித்துள்ள ‘MOM’ படம் இந்த வாரம் திரைக்கு வெளிவரவுள்ளது. அவரது ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இந்த படத்தை தன் மகள் ஜான்விக்கு திரையிட்டு காட்டியுள்ளார். இப்படத்தை பார்த்து முடித்த ஜான்வி ஒரு வார்த்தை கூட பேசவில்லையாம். சொல்ல வார்த்தைகள் இல்லை என்பதால் ஸ்ரீதேவியை கட்டியணைத்து கொண்டாராம். இந்நிலையில் ஜான்வி விரைவில் சினிமாவில் காலடி எடுத்துவைக்க திட்டமிட்டுள்ளது என குறிப்பிடத்தக்கது.