அயன்மேன்’ ராபர்ட் டவுனி ஜூனியர் இந்தியாவுக்கு வர உள்ளார்!
மார்வெல் படங்களில் அயன்மேன் கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் ரசிகர்களை வைத்திருப்பவர் ராபர்ட் டவுனி ஜூனியர். இந்தியாவிலும் இவருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். ராபர்ட் டவுனி நடித்துள்ள அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் உலகம் முழுவதும் இந்த மாதம் இறுதியில் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் ராபர்ட் டவுனி ஜூனியர் சென்னை, மும்பை, பெங்களூர், டெல்லியில் உள்ள ரசிகர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:- இந்திய ரசிகர்கள் அனைவரும் அற்புதமானவர்கள். நான் இதுவரை இந்தியாவுக்கு வந்தது இல்லை. நிச்சயம் விரைவில் இந்தியாவுக்கு வருவேன். இந்தியா வரும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது அனைத்து சூப்பர் ஹீரோ நடிகர்களும் ஒன்றாக நேரத்தை செலவிட்டோம். நாங்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்ததை பிரிதிபலிக்கும் வகையில் எண்ட்கேம் படம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.