‘அயோக்யா’ படக்குழுவின் அயோக்ய’ தனம் – நடிகர் பார்த்திபன் !
வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், பார்த்திபன் நடித்துள்ள ‘அயோக்யா’ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. நடிகர் பார்த்திபன் படம் தள்ளிப்போனதை டுவிட்டரில் கண்டித்த பார்த்திபன், “கடைசி நிமிட இடையூறுகளால் அயோக்யா வெளியீடு தள்ளி விடப்படுவது அயோக்கியத்தனம்” என்று கூறியிருந்தார். இந்நிலையில் தனது கதையை திருடிவிட்டதாக அயோக்யா படக்குழுவை கண்டித்து டுவிட்டரில் இன்னொரு பதிவை பார்த்திபன் வெளியிட்டுள்ளார். அதில் “அயோக்கியா’த்தனம். 94-ல் வெளியான என் ‘உள்ளே வெளியே’ படத்தை லவுட்டி உரிமை பெறாமல் தெலுங்கில் ‘டெம்பர்’ என்ற பெயரில் படமாக எடுத்து வெற்றிபெறச் செய்து தமிழிலும் தற்போது எடுத்து அதில் என்னையும் நடிக்க வைத்து என்ன ஒரு அயோக்கியத்தனம்?. குற்ற உணர்ச்சி இல்லாமல் எப்படி? வழக்கு செய்யாமல் பெருமையுடன் பதிவிடுகிறேன் என்று கூறியுள்ளார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.