அரசியலிலிருந்து மீண்டும் திரைக்கு திரும்பிய விஜயசாந்தி !

பாரதிராஜாவின் ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தில் அறிமுகமான விஜயசாந்தி 1980-களில் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். இரண்டு மொழிகளிலும் வெளியான வைஜயந்தி ஐ.பி.எஸ் படத்தில் அதிரடி சண்டை காட்சிகளில் நடித்து பேசப்பட்டார் விஜயசாந்தி. இந்த படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. 2006-ல் சினிமாவை விட்டு ஒதுங்கி ஆந்திர அரசியலில் குதித்த அவர் 12 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். மகேஷ்பாபு கதாநாயகனாக வரும் தெலுங்கு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜயசாந்தி நடிக்கிறார். தமிழிலும் இதை வெளியிடுகின்றனர். இந்த படத்தில் நடிக்க அவருக்கு ரூ.2 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது. விஜயசாந்தி மேக்கப் போடும் தனது படத்தை டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார். அவர் கூறும்போது, “12 ஆண்டுகளுக்கு பிறகு எனது நடிப்பை ரசிகர்களுக்கு காட்ட தயாராகி விட்டேன். படத்துக்கு சரிலேறு நீகெவரு என்று பெயரிட்டுள்ளனர். மகேஷ்பாபுவுக்கு இணையாக எனது கதாபாத்திரம் இருக்கும். பொங்கலுக்கு படம் திரைக்கு வருகிறது என்றார்.