அரசியலுக்கு நடிகர் அஜித் வரவேண்டும் என சுசீந்திரன் அழைப்பு!

திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும் எனவே அரசியலுக்கு நடிகர் அஜித் வரவேண்டும் என சுசிந்தரன் அழைப்பு விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 40 ஆண்டுகால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன் கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இதுதான் 100% சரியான தருணம் மாற்றத்தை உருவாக்கு உங்களுக்காக காத்திருக்கும், பலகோடி மக்களின் நானும் ஒருவன் என சுசீந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அஜித் தெரிவித்திருந்ததையே அவரது ரசிகர்களும் தற்போது உறுதிபட தெரிவித்துள்ளனர்.‘அரசியல் வேண்டாம் அஜித்தே போதும்’ இது தொடர்பாக அஜித் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட தொடங்கினர்.