அரசியலுக்கு வருவதில் துளியும் எண்ணமில்லை – சிவகார்த்திகேயன் !

தனக்கென்று ஒரு ஸ்டைல் உருவாக்கி ஒவ்வொரு படத்திலும் தன்னை மெருகேற்றி வரும் சிவகார்த்திகேயன். தனது திரைப்பயணத்தை பற்றி கூறுகையில் ஒவ்வொரு படமும் எனக்கு முதல் படம் மாதிரிதான். எனது கேரக்டரை கவனமாக கையாள்கிறேன். நடிப்பது, படங்கள் தயாரிப்பது, பாட்டு எழுதுவது, பாடுவது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தும் நான், ஆரம்பத்தில் ஓரிரு படங்களில் அசிஸ்டெண்ட் டைரக்டராக பணியாற்றிய அனுபவம் பெற்றிருந்தாலும், படம் இயக்குவது என் நோக்கம் அல்ல. இப்போது மட்டுமல்ல, எப்போதுமே அரசியலுக்கு வர மாட்டேன். தேர்தலில் நான் யாருக்கு வாக்களித்தேன் என்று, இதுவரை என் மனைவியிடம் கூட சொன்னது கிடையாது.