அரசியல்; உதயநிதி ஸ்டாலின்
தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளராக சினிமாவுக்குள் வந்தார்.அதன் பிறகு ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கினர்.அதன் பிறகு கதிர்வேலன் காதல், நண்பேண்டா, கெத்து, மனிதன், சரவணன் இருக்க பயமேன், பொதுவாக என் மனசு தங்கம், நிமிர் ஆகிய படங்களில் நெக்ஸ்ட் டோர் பாய் அடையாளத்தை தக்க வைத்து கொண்டார்.அரசியல் பற்றி நடிக்கும் போதும்,தயாரிக்கும்போதும், எதுவும் பேசாத அவர் சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கி கொண்டு அரசியலில் நேற்று ஈடுபட்டுள்ளார். அவர் சினிமாவிற்கு வரும் போது, சினிமாவில் நடித்து அந்த செல்வாக்கை வைத்து கொண்டு அரசியலில் ஈடுபடுவார் என சரியாக கணிக்கப்பட்டது. அவர் சமீபகாலமாக அரசியல் கருத்துக்களை பேச துவங்கியுள்ளார் அதோடு திமுக பிரமுகர்கள் மேடையில் ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி தான் கழகத்தை காக்க இருக்கிறார் என்ற அர்த்தத்தில் பேச ஆரம்பித்துள்ள நிலையில் அவர் சென்னையில் திமுக சார்பில் நடந்த பஸ்கட்டண உயர்வு எதிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார். இது குறித்து செய்தியாளரிடம் அவர் கூறுகையில் “இனி திமுக நடத்தும் அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொள்வேன் என்றும் அரசியலில் தீவிரமாக பணியாற்றுவேன் ” என்றும் கூறியுள்ளார்.