அரசியல் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட வரலட்சுமி சரத்குமார்!

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவா கல்லூரியில், தன்னார்வ அமைப்பின் சார்பில் பெண்கள் தின கொண்டாட்ட விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகை வரலட்சுமி சரத்குமார், ஐந்து ரூபாய்க்கு எளிய முறையில் நாப்கின் வழங்கும் இயந்திரத்தை அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை வரலட்சுமி, பள்ளி, கல்லூரிகளில் இதுபோன்று நாப்கின்கள் கிடைக்கும் என்றால், ஏழை மாணவிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்று கூறினார். அரசியலில் பணியாற்றும் காலம் வந்தால், கண்டிப்பாக தெளிவான மனநிலையோடு மக்கள் பணியாற்றவிருப்பதாகவும் வரலட்சுமி சரத்குமார் தெரிவித்தார்.