அரவிந்தசாமியின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு !

நடிகர் அரவிந்தசாமி நடித்த 'சதுரங்க வேட்டை 2' மற்றும் 'நரகாசுரன்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரிலீசுக்கு தயாராகி பல மாதங்கள் ஆகிய பின்னரும் இன்னும் ஒருசில பிரச்சனைகளால் படங்கள் வெளிவராமல் முடங்கியுள்ளது. இந்நிலையில் அரவிந்தசாமியின் புதிய படம் ஒன்று டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் சற்றுமுன் வெளியாகியுள்ளது. 'புலனாய்வு' என்ற தலைப்புடன் வைக்கப்பட்டுள்ள இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தை 'ஹரஹர மகாதேவகி', இருட்டு அறையில் முரட்டு குத்து' ஆகிய அடல்ட் காமெடி படத்தை இயக்கிய சந்தோஷ் ஜெயகுமார் இயக்கவுள்ளார். வி.மதியழகன் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார். டிடெக்டிவ் கதையம்சம் கொண்ட இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகவுள்ளது.